ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி ! 

மிருகத்தையும் 
மனிதனாக்கியது 
மழலையின் சிரிப்பு ! 

களத்துமேட்டில் குவித்த நெல் 
குறையவில்லை அப்படியே 
கிராமங்களில் ! 

தேவைப்பட்டது பணம் 
நடத்தினார் 
காதணி விழா ! 

ஒய்வுக்குமுன் 
மகள் திருமணம் 
அரசு ஊழியர் ! 

விமானம் ஓட்டினாலும் 
வீட்டில் சமையல் 
பெண்கள் ! 

சோழியன் குடுமி 
சும்மா ஆடியது 
காற்று ! 

வைகுண்டத்திற்கு வழி சொன்னவர் 
மறந்தார் 
தன் வீட்டிற்கு வழி ! 

இன்றும் தொடர்கின்றது 
மன்னனின் சந்தேகம் 
கூந்தலின் மணம் இயற்கையா ? 

மரம் இழந்த இலை 
சருகானது 
பெற்றோர் இழந்த குழந்தை ? 

ஒன்றும் ஒன்றும் இரண்டு 
குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று 
பிரிவினை பெரிய வினை ! 

வயதைக் குறைக்கும் 
வாழ்நாளை நீடிக்கும் 
இலக்கிய ஈடுபாடு ! 

அளவிற்கு மிஞ்சினால் 
அமுதமும் திகட்டும் 
திகட்டாத தமிழ் ! 

கருத்துகள்