இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி




இலக்கிய முற்றம்
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வானதி பதிப்பகம் 23.தீனதயாளன் தெரு, தி .நகர் .சென்னை .17 விலை ரூபாய் 120
நூலின் அட்டைப்படம் மிக அருமை .அற்புதம் .இயற்கைக் காட்சிகளை கண் முன் நிறுத்துகின்றன ."இலக்கிய முற்றம் " என்ற நூலின் பெயர் கவித்துவம் .நூலின் உள்ளே நுழைந்தால் இலக்கிய விருந்து .நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்அவர்களின் என்னுரையின் தலைப்பு "நல்லன எல்லாம் தரும் " என்பது உண்மை .இந்த நூலைப் படித்தால் நல்லன எல்லாம் தரும்.நூலின் பயனை குறிப்பிடுவதாக உள்ளது .பாராட்டுக்கள்
கவிதைஉறவு,புதுகைத்தென்றல் ,மனிதநேயம் ,ரசனை ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த கட்டுரைகளை மாதாமாதம் தொடர்ந்து படித்து வருகிறேன். மொத்தமாக நூலாக வந்தபின் மறு வாசிப்பு செய்த பின் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன் அவர்களின் ஓயாத உழைப்பை எண்ணி வியந்தேன் .
வரலாற்று சிறப்பு மிக்க மதுரை காமராசர் பலகலைக் கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணி புரிந்துக் கொண்டே ,பல்வேறு இலக்கிய மேடைகளில் இலக்கிய உரை நிகழ்த்திக் கொண்டு ,பட்டிமன்ற நடுவராக முத்திரைப் பதித்துக் கொண்டு ,பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறார். எழுதிய கட்டுரைகளை உடனுக்குடன் நூலாக்கி விடுகின்றார் .இவர் எப்போது படிக்கிறார் , எப்போது எழுது
கிறார் .எபோதாவதுதான் தூங்குவார் போலும் .முனைவர் வெ.இறையன்பு அவர்கள் குறிப்பிடுவதுப்
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மிகச் சிறந்த ஆளுமையாளர் பேராசிரியர்
இரா .மோகன்.அவருடைய திறனாய்வுப் புலமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது . நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி வெற்றி முத்திரை பதித்து வருகிறார் .பேராசிரியர் இரா .மோகன்.அவர்கள் சக எழுத்தாளர்களையும் ,கவிஞர்களையும் மனம் திறந்து பாராட்டும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர். இந்த நூலிற்கு அணிந்துரை என்று யாரிடமும் வாங்காமல் .இவரது கட்டுரைகளை இதழ்களில் பாராட்டிய வாசகர்களின் கடிதங்களின் சுருக்கத்தை அணிந்துரையாக வைத்து இருப்பது புதிய உத்தி .பாராட்டிய வாசகர்களுக்கும் மகுடம் வைத்துள்ளார் .
நூலில் 30 கட்டுரைகள் உள்ளது .முத்தமிழ் போல மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்கி உள்ளார் .முதல் பகுதியில் வாழும் படைப்பாளிகளுக்கு புகழ் கீரிடம் .
இரண்டாம் பகுதி வாழ்ந்து உடலால் மறைந்து பாடாலால் இன்றும் வாழும் சங்கப் புலவர்களுக்கு புகழ் கீரிடம் .
மூன்றாம் பகுதி வாழ்வியல் இலக்கணம் விளக்கும் பகுதி .
மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு தொடங்கி தமிழுக்குக் கிடைத்து இருக்கும் திறமான சென்ரியு கவிஞர் அமுதன் வரை 11 கட்டுரைகள் ,இலக்கிய முற்றம் 12 கட்டுரைகள்,சிந்தனை மன்றம் 7கட்டுரைகள்.மூன்று பகுதியாக உள்ள 30 கட்டுரைகளும் முத்தமிழாக இனிக்கின்றது படித்து முடிக்கும் வாசகர்களை பண்படுத்தும் விதமாக ,பக்குவப்படுத்தும் விதமாக நெறிப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
கவிதைஉறவு இதழில் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களின் கவிதையில் இருந்து திறனாய்வாகக் காட்டி உள்ள கவிதை இதோ !
மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல
ஒரு சாட்டையோடு !
(யாரும் யாராகவும் பக்க எண் 45 )
நூலின் பெயர் பக்க எண் குறிப்பிட்டு எழுதுவது நூல் ஆசிரியர் வழக்கம் .பக்க எண் வரை குறிப்பிட்டு பக்காவாக எழுதுவது தனிச் சிறப்பு .
படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன் போன்ற திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டி பாராட்டுவதில்தான் உள்ளது .
படைப்பாளிகளின் திறமைகளை திறனாய்வின் மூலம் பறை சாற்றி வருகின்றார் .
கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள் பற்றிய கட்டுரையில்
இருந்து என்ன ஆகப் போகிறது செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது இருந்து தொலைக்கலாம்
(கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள் பக்க எண் 45 )
இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியதோடு நின்று விடாமல் நூல் ஆசிரியர் ஒப்பு இலக்கியத் துறை வல்லுநர் என்பதால், ஆங்கில இலக்கியத்தில் இருந்து ஒப்பிட்டு அசத்துகின்றார் .
TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION
சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வரிகளோடு ஒப்பிட்டு மேற்கோள் காட்டி படைப்பாளி சிந்திக்காத கோணத்திலும் சிந்தித்து வியப்பை வரவழைக்கிறார் .
திரைப் பாடல்கள் மூலம் முத்திரை பதித்த கவிஞர் பழனி பாரதி பற்றிய கட்டுரையில் .
காலமே என் இளமைச்
சீட்டாடித் தோற்காதே !
செலவழி ஒரு போராளியின்
கடைசீ துப்பாக்கி ரவையாக
( வெளிநடப்பு பக்க எண் 21 )
இந்தக் கவிதையை மேற்கோள் காட்டி உவமையில் மிளிரும் பழனி பாரதியின் தனித்துவம் என்று பாராட்டி உள்ளார் .
நூல் ஆசிரியர் மேற்கோள் காட்டி உள்ள கவிஞர் அமுதனின் சென்ரியு கவிதைகள் அனைத்தும் அற்புதம்.
"இழுக்க இழுக்க இன்பம் " என்று புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சொல்லும் பொய் மொழி கேட்டு இருக்கிறோம் .அந்து பொய் மொழியை சற்று மாற்றி எழுதியுள்ள சென்ரியு இதோ !
இழுக்க இழுக்கத் துன்பம்
இறுதிவரை
மெகா தொடர்
( காற்றின் விரல்கள் பக்க எண் 25 )
தொலைக்காட்சித் தொடர்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அவலத்தைச் சுட்டும் சென்ரியு மிக நன்று .
நூலின் இரண்டாம் பகுதியில் திருக்குறள் , ,குறுந்தொகை ,கலித்தொகை ,சங்க இலக்கியங்களிலிருந்தும், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் போன்றவற்றிலிருந்தும் புகழ்ப்பெற்ற பாடல்களை எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக மிக மிக எளிமையாகவும் இனிமையாகவும் கட்டுரை வடித்து உள்ளார் .
வாழ்வில் நெறிப் போதிக்கும் மூன்றாம் பகுதியில் புத்தர் பொன் மொழிகள் ,மகாகவி பாரதியின் வைர வரிக் கவிதைகள் ,சேக்ஸ்பியர் பொன் மொழிகள் ,காண்டேகர் பொன் மொழிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி ,நூல் வழங்கி உள்ளார்கள் .ஒரு மனிதன் செம்மையாக வாழ்வதற்கு வழிக்காட்டும் ஒளி விளக்காக அற்புதக் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது .படித்து விட்டு பாதுகாத்து வைத்து இருந்து மனச் சோர்வு வரும்போதெல்லாம் மறு வாசிப்பு செய்து புத்துணர்வு பெறும் நூல் இது .
திறம்பட தொடர்ந்து நூல்கள் எழுதிவரும் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள் .மிகச் சிறப்பாக அச்சிட்டு வெளிக் கொணர்ந்த வானதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

கருத்துகள்