படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஹைக்கூ ! கவிதாயினி மு. கௌந்தி ። சென்னை.



படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !  கவிதாயினி   மு. கௌந்தி ። சென்னை.

தூளியில் ஆட்டியும்
உறங்கவில்லை 
பொம்மை ! 

நள்ளிரவு
ஆடி அசைகிறது
ஊர்வலத்தில் சாமி!

பாழடைந்த வீடு 
பழுதாகவில்லை
பழைய நினைவு !

ஆயிரங்காலத்து பயிர்
அறுவடையாகவில்லை
விவாகரத்து !

பாட்டு சத்தம்
ஆடமுடியவில்லை
தேசியகீதம் !

கருத்துகள்