விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி 

வந்தது பார்வை 
பார்வையற்றவர்களுக்கு 
விழிக்கொடை ! 

இறந்தப் பின்னும் 
இறக்காத விழிகள் 
விழிக்கொடை ! 

மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம் 
மனிதர்களுக்கு வேண்டும் 
விழிக்கொடை ! 

கரு விழிகள் 
அகற்றியது இருள் 
விழிக்கொடை ! 

வாழ்கிறான் கொடையில் 
வள்ளல் கர்ணன் 
விழிக்கொடை ! 

உயிர்ப் பிரிந்தும் 
உயிர்ப் பெற்றது 
விழிக்கொடை ! 

உடல் மாறியும் 
உயிர் உள்ளது 
விழிக்கொடை ! 

ஒளி ஏற்றியது 
வழி காட்டியது 
விழிக்கொடை ! 

துன்பம் துரத்தி 
இன்பம் ஈந்தது 
விழிக்கொடை ! 

குறையை நீக்கி 
நிறைவாக்கியது 
விழிக்கொடை ! 

மரிக்கவில்லை மனிதம் 
மனிதரில் புனிதம் 
விழிக்கொடை ! 

வைத்தது முற்றுப்புள்ளி 
மூடநம்பிக்கைக்கு 
விழிக்கொடை ! 

செத்தப்பின்னும் 
சாகவில்லை 
விழிக்கொடை ! 

இறப்பிலும் பிறப்பு 
இறக்கத உறுப்பு 
விழிக்கொடை ! 

மரணித்தும் மரணிக்கவில்லை 
முடிவிலும் இனிய தொடக்கம் 
விழிக்கொடை !

கருத்துகள்