மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !




மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! 

வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் 
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! 

இறவாமல் செய்ய முடியாவிடினும் 
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் ! 

ஆறு நூறு வயது பேதமின்றி 
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் ! 

கற்ற மருத்துவக் கல்வியை 
கடைசிவரை மறக்காதவர்கள் ! 

ஓய்வு பெரும் வயதானாலும் 
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் ! 

வாழையடி வாழையென மருத்துவ 
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் ! 

முகம் சுளிக்காமல் எந்நேரமும் 
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் ! 

நேரம் காலம் பாராமல் எந்நேரமும் 
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் ! 

நாடியைப் பிடித்துப் பார்த்தே 
நலம் நலமின்மை சொல்பவர்கள் ! 

விழிகளை உற்று நோக்கியே 
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் ! 

இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே 
இனிதே மருந்து தருபவர்கள் ! 

விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு 
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் ! 

நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு 
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் ! 

வலியால் துடித்து வாடுபவர்களுக்கு 
வலிஅகற்றும் வல்லவர்கள் ! 

இரத்தம் போனவர்களுக்கு உடன் 
இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் ! 

இதய நோய் உள்ளவர்களுக்கு 
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் ! 

மனோதத்துவமும் அறிந்து வைத்து 
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் ! 

உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின் 
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் ! 

சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும் 
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் ! 

மனித உயிர்களின் மகத்துவமறிந்த 
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் ! 

நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும் 
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் ! 

மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு 
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் ! 

சாகாமல் காத்திட என்னவெல்லாம் 
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் ! 

பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி 
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள் 

எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை ! 
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை ! 

மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் ! 
மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !

கருத்துகள்