ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சுட்டபோதும்
சுவை தந்தது
சோளக்கதிர் !
புறம் முள்ளாக
அகம் இனிக்கும் சுளையாக
பலா !
அருகே முள்
ஆனாலும் மகிழ்ச்சி
ரோசா !
வேறு இல்லை
இணையான மலர்
செம்பருத்தி !
உருவமின்றியே
அசைத்தன கிளைகளை
காற்று !
இல்லை தண்ணீர்
உண்டு வரலாறு
பழைய கிணறு !
தெரிந்தது
குளத்தில்
நகரும் மேகம் !
துளிர்த்தது
பட்ட மரம்
நல்ல மழை !
வெடித்தது பஞ்சு
வருத்தத்தில்
இலவு காத்த கிளி !
பணிவே சிறப்பு
வளைந்து நின்றது
விளைந்த கதிர் !
கருத்துகள்
கருத்துரையிடுக