தங்கரதம் !
திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி !
இயக்கம்; பாலமுருகன் !
நடிப்பு ;வெற்றி !
படத்தின் கதாநாயகன் வெற்றி இனிய நண்பர் முனைவர்
ஞா .சந்திரன் அவர்களின் நண்பர் .புதியவர்களின் புதிய முயற்சி . ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையில் சரக்கு உத்து ஓட்டுநராக வருகிறார் வெற்றி .இவருக்குப் போட்டியாக மற்றோர் ஓட்டுநர் இவர்களுக்குள் நடக்கும் மோதல் .போட்டி ஓட்டுனரின் தங்கையை வெற்றி காதலிக்கிறார் .காதல் வென்றதா? எனபதே திரைக்கதை .
வெற்றி சிறுவனாக இருக்கும்போதே வெற்றியின் அப்பா தன் நண்பரிடம் வெற்றியை ஒப்படைக்கிறார் .அவரை வெற்றி'சித்தப்பா 'என்றே அழைக்கிறார் .வெற்றியை வெற்றிகரமான ஓட்டுநராக்கி , தங்கரதம் என்ற சரக்கு உந்து வண்டியை வெற்றி பெயரில் பதிந்து தருகிறார் .
வெற்றியின் போட்டியாளர் வெற்றியை கொல்லும் அளவிற்கு பகை உண்டாகிறது .வெற்றியைக் காப்பாற்ற சித்தப்பா தன் மகனுக்கு பகையாளியின் தங்கையை திருமண உறுதி செய்து வெற்றியின் உயிரைக் காப்பாற்றுகிறார் .
தன் காதலி என்பது தெரியாமலே,சித்தப்பா தன்னைக் காப்பாற்ற தன் மகனுக்கு திருமண உறுதி செய்தது அறிந்து .தன்னை வளர்த்து உருவாக்கி பாச மழை பொழிந்த சித்தப்பாவிற்க்காக காதலியைப் பிரிகிறார்.தன் நிலையை காதலியிடம் எடுத்துச் சொல்லி விலகுகிறார்.வித்தியாசமான முடிவு.வழக்கமாக திரைப்படங்களிலு ம் காதல் வெல்ல வேண்டுமென்று இணைத்து வைப்பார்கள் .ஆனால் இந்தப்படத்தில் வளர்த்த பாசம் அன்பு வெல்கின்றது .
கருத்துகள்
கருத்துரையிடுக