ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !


உலகமே சுற்றினாலும் 
ஈடு இணை இல்லை 
பிறந்த மண் !

உண்பது பச்சைப்புல்
தருவது வெள்ளைப்பால்  
விசித்திர மாடுகள் !

வரைந்து முடித்தான் 
சாலையில் கடவுள் ஓவியம் 
வந்தது மழை !

இறந்த பின்னும் விடவில்லை 
பதவி ஆசை அரசியல்வாதிக்கு 
சிவலோகப் பதவி !

உணர்க
பட்டுப்பூச்சிகளின் மரணத்தால்   
வந்தது பட்டுச்சேலை !

அறியவில்லை 
தன் வீ ட்டுத் திருட்டு 
குறி சொல்லும் கோடாங்கி !

வெள்ளையா இருக்கிறவன் 
பொய் சொல்ல மாட்டன் 
மூட நம்பிக்கை !

பலருக்கு சம்பவம் 
சிலருக்கு சரித்திரம் 
மரணம் !

கல் மண் தண்ணீர் 
கொள்ளை 
தனக்குத்தானே கொல்லி !

மம்மி என்றால் 
செத்த பிரமிடு 
சொன்னது குழந்தை !

சிறிய வீடு 
பெரிய மனம் 
ஏழை !  

பெரிய வீடு 
சிறிய மனம் 
பணக்காரன் !
.
தன்னை உருக்கி 
பிறருக்கு ஒளி 
மெழுகு !

நலமாக   வாழ 
நாளும் தேவை 
நல் தானியங்கள் !

ஆடி மாதம்  
தேடி விதைக்கவில்லை
பெய்யவில்லை மழை !

கருத்துகள்