ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தமிழின் கருவூலம்
தமிழரின் அடையாளம்
திருக்குறள் !
பரவ விடாதீர்
தொற்றுநோய்
தமிங்கிலம் !
கவனம் ஆண்களே
கன்னம் கிள்ளியது
கொலையில் முடிந்தது !
முடியவில்லை
ஆடவோ அசையவோ
கையில் குடுமி !
உலகம் சுற்றும் வாலிபரே
உள்நாட்டையும் பாருங்கள்
உழவர்கள் தற்கொலை !
தினமும் தாக்குவான்
கைதும் செய்வான்
இலங்கை நட்பு நாடா ?
குறைந்தது வேகம்
வயது ஆக ஆக
வாகனத்தில் !
.
கொட்டு இன்றி ஆடும் காவலர்களுக்கு
கொட்டுத் தந்தார் ஆணையர்
தலைக்கவசம் சுற்றறிக்கை !
கருத்துகள்
கருத்துரையிடுக