கவுண்டமணி நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
பல கோடி ரசிகர்களை சிரிக்க வைப்பவர்
பல்வேறு வேடங்களில் வேறுபட்டு நடித்தவர் !
கரகாட்டக்காரன் படத்தில் வரும் நகைச்சுவையை
கண்கள் காணும் போதெல்லாம் சிரிப்பு வரும் !
ஒரு பழம் இங்கும் இருக்கு இன்னொரு பழம் எங்கே ?
என்று திரும்பத் திரும்பக் கேட்டு சிரிக்க வைத்தவர் !
கவுண்டமணி செந்தில் இருவரும் சேர்ந்து
கலக்கினார்கள் திரை உலகை என்பது உண்மை !
செந்திலுக்கு மகனாக நடித்து சிரிக்க வைத்தவர்
செந்திலின் தலைக்கு பல பெயர்கள் வைத்தவர் !
நீ வாங்கும் பத்துக்கும் அஞ்சுக்கும் இது தேவையா ? என்று
நன்றாக கேலிபேசி எல்லோரையும் சிரிக்க வைத்தகவர் !
நடிகன் திரைப்படத்தில் இனமுரசு சத்யராஜுடன்
நடிப்பதில் போட்டியிட்டு நடித்தவர் கவுண்டமணி !
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா ? என்ற
பதத்தை பிரபலமாக்கி புகழ் பெற்றவர் !
மன்றங்கள் வைப்பதில் உடன்பாடு இல்லாதவர்
மடத்தனம் என்று கடுமையாகச் சாடியவர் !
கதாநாயகர்களை நையாண்டி செய்தவர்
கதைக்கு ஏற்றபடி உருவத்தை மாற்றியவர் !
நடனம் ஆடுவதில் தனி முத்திரைப் பதித்தவர்
நடனம் இவர்போல யாரும் ஆடுவது கடினம் !
ஆச்சி மனோரமாவுடன் போட்டியிட்டு நடித்தவர்
ஆட்சி நகைச்சுவை ஆட்சி திரையில் புரிந்தவர் !
ஓடாத படங்களை எல்லாம் நகைச்சுவையால்
ஓடிட வைத்தவர் நடிகர் கவுண்டமணி !
கோவையின் கொங்கு தமிழை திரையில் பேசி
குவலயம் அறிந்திடப் பேசி சிரிக்க வைத்தவர் !
சக நடிகர்கள் அஞ்சும் அளவிற்கு திரையில்
சிறப்பாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் !
கதாநாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவர்
காலம் முழுவதும் நிலைக்கும் அவர் நகைச்சுவை !
இறந்து விட்டதாய் பலமுறை வந்தது வதந்தி
இறப்பு இல்லை உனக்கும் உன் நகைச்சுவைக்கும் !
கருத்துகள்
கருத்துரையிடுக