வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : குறள் ஒலி –மாத இதழ் பெங்களூரு ஜுன் 2017.





வெளிச்ச விதைகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி


மதிப்புரை : குறள் ஒலி –மாத இதழ் பெங்களூரு  ஜுன் 2017.

வெளிச்ச  விதைகள்  !

வெளியீடு ;வானதி   பதிப்பகம்  !

190  பக்கம் .  விலை ரூபாய்  120.
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com
*******
      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ், என்பது பழமொழி.  நூலாசிரியருக்கு இதுவும் பதினாறாவது தான்.  ஆம் இந்நூல், இவரது பதினாறாவது படைப்பு.  துளிப்பாவில் நீச்சலடிக்கும் பெரிய மீன்களில் இவரொரு சுறாமீன்.  ஆம். இணைய அஞ்சலைத் திறந்தால் இவரது துளிப்பா தான் வரவேற்கும்.  அந்த அளவிற்கு துளிப்பாவில் தோய்ந்தவர்.  அந்த வகையில் ‘வெளிச்ச விதைகள்’ அதே துளிப்பாக்களால் மலர்ந்த மலர்.  மலரின் மணக்கும் சில பாவரிகள் :

      ‘மாதா பிதா குறு மொத்தம் மனைவி !
      மனித வாழ்வில் பெருந்துணை பெண்கள்’ 
;
இப்படி குடும்பத்தின் ஆணிவேராக விளங்கும் இல்லத்தரசியைப் பாடுகிறார்.

      ‘தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை,
      தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’

ஆகா, தமிழுக்கு இதைவிட பெருமை வேறென்ன வேண்டும்.

      நிலவைப் பாடும் போது ;

      ‘உன்னைப் பாடாத கவிஞர் இல்லை
      உன்னைப் பாடாதவர் கவிஞரே இல்லை’ ;

- ஆம், நிலவைப் பார்க்காதவர்களும் இல்லை, நிலவைப் பாடாதவர்களும் இல்லை.

      அறிஞர் அப்துல் கலாம் அவர்களைப் பாடும் போது ;

      ‘முதற்குடிமகன்களின் முதற்குடிமனானவர்
      மொத்தக் குடிமகன்களின் உள்ளம் வாழ்பவர்’

என ஒன்பது பெருந்தலைப்புகளில் எண்ணிய கருத்துகளை எண்ணாமல் வழங்கியுள்ளார் கவிஞர்.

      வாசகர்களே, ‘வெளிச்ச விதைகள்’ உங்களுக்காக கவிஞர் விதைத்துள்ளார்.  இதனை நீங்கள் வாங்கி உங்கள் உள்ளங்களில் விதைத்தால் தான் நாளை இதுபோன்ற நிழல் தரும் மரங்களும், செடிகளும் மலர்களோடு பூத்துக் குலுங்கும். வாங்கிப் படித்து மகிழுங்கள்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்