ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !




ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !


சண்டையிட்ட பூனைகளை 
ஏமாற்றிய குரங்காய் 
அரசியல் !

ஒற்றுமை இல்லையெனில் 
இழப்புதான்
குரங்கு அப்பம் கதை !

உணர்த்தியது 
ஏமாற்றினால் ஏமாறுவாய் 
பாட்டி வடை கதை !

ஒன்று  செய்தால் 
மற்றவையும் செய்யும் 
குரங்கு குல்லாக் கதை !

உணர்த்தியது 
நேர்மைக்கு மதிப்பு உண்டு 
கோடாரிக் கதை !

உணர்த்தியது 
முயற்சி திருவினையாக்கும் 
காகம் தண்ணீர்  கதை !

மகிழ்ந்தன 
மரங்களும் 
கோடை மழை ! 

சூதாடிவிடும் 
வாழ்க்கையை 
சூதாட்டம் !

கருத்துகள்