ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வருத்தத்தில் விவசாயி
மகிழ்வில் மணற்கொள்ளையர்
வறண்ட ஆறு !
அழுகை நிறுத்தியது குழந்தை
சவ் மிட்டாய்காரனின்
கை தட்டும் பொம்மை !
சுவை அதிகம்
பெரிதை விட சிறிது
வெள்ளரிப்பிஞ்சு !
பத்துப்பொருத்தம்
இருந்த இணைகள்
மணவிலக்கு வேண்டி !
சொத்துக்களில்
சிறந்த சொத்து
தன்னம்பிக்கை !
அன்று சமர்கிருதம்
இன்று நீட் தேர்வு
அவாள் சதி !
திரும்பக் கிடைக்காது
வீணாக்கிய
வினாடிகள் !
பிறரை நேசிக்கும் முன்
முதலில்
உன்னை நேசி !
தேடி வராது
தேடிச்செல்
வாய்ப்பு !
வருடங்களானலும் மறக்காது
உயிர் காக்கும்
கற்ற நீச்சல் !
சம்பாதிக்கும் அப்பா 300 ரூபாய்
படிக்கும் மாணவன் 3000 ரூபாய்
காலணி !
போட்டியாளர்கள்
அகற்றவேண்டியது
தோல்வி பயம் !
பிறருக்கு வழங்கினால்
நமக்கும் வளரும்
தன்னம்பிக்கை !
அறிவது அழகு
ஆடம்பரம் அழிவு
அடக்கம் உயர்வு !
.
ஆசையை அழிக்கச்
சொன்ன பூமியில்
பேராசை !
குடை விரித்தது
மழை நின்றதும்
காளான் !
வருமானம் அல்ல
அவமானம்
மதுக்கடை !
நேரம் விழுங்குகிறது
அன்று தொலைக்காட்சி
இன்று அலைபேசி !
நடிகராக மட்டும்
பாருங்கள்
நடிகவேள் வேண்டுகோள் !
பூனையில் சைவம் இல்லை
பசுவில் அசைவம் இல்லை
இயற்கையின் இயல்பு !
பூமியை முடித்து
நிலவை ஆராய்கிறான்
சுரண்டிட மனிதன் !
தேவைப்பட்டது தண்ணீர்
செயற்கை மலர்களுக்கும்
தூசி கழுவ !
இரை தேடித் செல்லும்
மீனவன் இரையாகிறான்
சிங்கள ஓநாய்களுக்கு !
வயிற்றுப் பிழைப்பு முயற்சியில்
மீனவர்கள் உயிர் பறிப்பு
இலங்கை இராணுவம் !
பார்த்தாலே
எச்சில் ஊறும்
மாங்காய் !
தானாக உதிரவில்லை
உதிர்த்தது காற்று
இலைகளை !
கருத்துகள்
கருத்துரையிடுக