தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதை மணி தந்த தலைப்பு !

கோடை மழை !  கவிஞர் இரா .இரவி !


கோடை மழை கொண்டாட்டம் தரும் 
கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் !

குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும் 
குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் !

வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம் 
வளம் பெருக்க வந்த மழை  எனப்  பாராட்டுவோம்  !

வாடி நிற்கும் பயிர்கள் துளிர்த்து வளர்ந்திடும் 
வேதனையில் உள்ள விவசாயிகள் மகிழ்வார்கள் !

காதலியைக் கண்ட காதலன் போல 
கழனியில் உள்ள உழவர்கள்  மகிழ்வார்கள் !

நிலத்தடி நீரின் உயரம் உடன் உயர்ந்திடும் 
நிலம் செழிக்கும் வளம் கொழிக்கும் !

அனல் காற்று குளிர் காற்றாக மாறிடும் 
அனைவருக்கும் மகிழ்ச்சி மனதில் பொங்கும் !

அண்டை  மாநிலங்களிடம் கெஞ்ச வேண்டிய 
அவசியம் இல்லாது ஒழிந்து போகும் !

இடியுடன் கூடிய கனமழை பொழிந்தால்
இன்னல்கள் தீரும் இன்பம் பெருகும் ! 

குடி தண்ணீர் பஞ்சம் இல்லாது போகும் 
குடித்திடத் தண்ணீர் எல்லோருக்கும் கிட்டும் !

வெப்பமயமாதல் இல்லாது போகும் 
வசந்தம் வரும் வாசமலர் மலரும் !

பட்ட மரங்களில் இலைகள் வளரும் 
பட்ட துன்பங்கள் காணாமல் போகும் !

இயற்கை  நம்மை கைவிடாது காக்கும் 
இயற்கையை மதித்தால் நன்மை தரும் !

கோடை மழையை  வாருங்கள் வரவேற்போம் 
குடை பிடிக்காது  நனைந்து மகிழ்ந்திடுவோம் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்