ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





ஹைக்கூ  !   கவிஞர் இரா .இரவி !


நாடகம் அரங்கேற்றம் 
பல கோடிகள் திருடனுக்கு 
சில நிமிடங்களில் பிணை !


எல்லா வழியிலும் போராடி 
கிட்டவில்லை வெற்றி 
விரக்தியில் விவசாயிகள் !

நேரமில்லை 
உழவர்களைப்  பார்க்க 
வெளிநாடு பயணம் !

யாரும் யாருக்கும் 
சளைத்தவர்கள் அல்ல 
ஊழல் புரிவதில் !

எரிபொருள் விலை 
கூடக் கூட 
எரிகிறது மனம் !


எதுவும் செய்வார்கள் 
அரசியல்வாதிகள் 
பதவி சுகத்திற்கு !

கூரையில் தீ வைப்பவன் 
நல்ல மகன் கதையாய் 
அரசியல் !
.
சின்ன மீன் போட்டு 
தங்க மீன் பிடிப்பு 
அரசியல் !

கேலிக் கூத்தானது 
உலக அரங்கில் 
தேர்தல் !

நடுவதோடு சரி 
பராமரிப்பதில்லை 
மரம் !


பறிக்காமல் 
உதிர்ந்தன 
பூக்கள் !

கருத்துகள்