உலக புத்தக தினம் ! 23.4.2017. புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !





உலக புத்தக தினம் !     23.4 .2017.

புத்தகம் !   கவிஞர் இரா .இரவி !

அகம் புதிதாக உதவுவது புத்தகம் !  
அகிலம் அறிந்திட  உதவுவது புத்தகம் !  

அறிஞர்களை அறிந்திடத்  துணை புத்தகம் !  
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! 

ஆற்றல் பெருகிடக்  காரணம் புத்தகம் !  
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் ! 
இல்லம் நிறைந்திடத்  தேவை புத்தகம் !  
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் !  
எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் !  
ஏணியென உயர்த்துவது புத்தகம் !  

மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் !  
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் !  

மனதில் மாற்றம் தருவது புத்தகம் !  
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் !  

கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !

இலக்கிய ஈடுபாடு வளர்க்கும்  புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !

விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !

நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !
.
மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப்  போக்கும் காரணி புத்தகம் !

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக்  கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !

குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !

நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !

புத்தரைப்   புரிய  வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க   வைக்கும் புத்தகம் !

பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !

அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !

திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !

வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !

சோதனைகளைச் சாதனைகளாக்கும்  புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !

வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும்  புத்தகம் !

பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும்   பாருக்குக் காட்டுவது புத்தகம் !

படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !

படிக்கப்  படிக்க உயர்த்திடும்  புத்தகம் !
படிக்கல்லாக இருந்து  உயர்த்திடும்  புத்தகம் !

இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது  புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !

காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !

கரக்கக் கரக்க  பால் தருமாம் காமதேனு !
படிக்கப்  படிக்க பரவசம் தரும் புத்தகம் !

இரைக்க இரைக்க தண்ணீர்  சுரக்கும்  கிணறு !
படிக்கப்  படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !

உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும்  உள்ளத்தையும்  செம்மையாக்கும் புத்தகம் !

தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !
-------------------------------------------------------------------------------
புத்தகம் !    கவிஞர் இரா .இரவி !

மனிதனை மனிதனாக 
வாழ வைப்பது 
புத்தகம் ! 

மனிதனின் வளர்ச்சிக்கு 
வித்திட்டது 
புத்தகம் ! 

பண்பாடு வளர்த்து 
பண்பைப் போதிப்பது 
புத்தகம் ! 

அறிவியல் அறிவை 
அகிலம் பரப்பியது 
புத்தகம் ! 

பயனுள்ள கண்டுபிடிப்பு 
வாழ்வின் பிடிப்பு 
புத்தகம் ! 

புரட்சியாளனை 
உருவாக்கியது 
புத்தகம் ! 

அகிம்சைவாதியை 
வளர்த்தது 
புத்தகம் ! 

பகுத்தறிவுப் பகலவன் 
ஒளிவீசக் காரணம் 
புத்தகம் ! 

பேரறிஞர் 
புகழ்ப் பெறக் காரணம் 
புத்தகம் ! 

அகமும் புறமும் 
சுத்தம் செய்வது 
புத்தகம் ! 

அகம்பாவம் ஆணவம் 
அகற்றுவது 
புத்தகம் ! 

பணிவு கனிவு தெளிவு 
வழங்குவது 
புத்தகம் ! 

அறிவை விரிவு செய்து 
அறியாமையை அகற்றுவது 
புத்தகம் !
--------------------------


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்