படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


விமானமும் ஓட்டுவார்கள் 
குடங்களும் தூக்குவார்கள்
பெண்கள் !

ஆண்களை விட பெண்கள் 
ஆற்றல் மிக்கவர்கள் 
மெய்ப்பிக்கும் படம் !

குடி தண்ணீருக்காக 
குடங்களுடன் ஊர்வலம் 
பாலைவன அவலம் !

வித்தைக் காட்டவில்லை 
வியர்வை  சிந்தி 
பெறுகின்றனர் தண்ணீர் !

சிக்கனமாகச் செலவழியுங்கள் 
வீணாக்காதீர்கள் 
தண்ணீரை !

கருத்துகள்