“வெளிச்ச விதைகள்” நூல் ஆசிரியர் கவிஞர் – இரா - இரவி நூல் மதிப்புரை : முகநூல் தோழி கஸ்தூரி ராமராஜ், கோயம்புத்தூர்.






“வெளிச்ச விதைகள்”

நூல்   ஆசிரியர் கவிஞர் – இரா - இரவி

நூல் மதிப்புரை : முகநூல் தோழி கஸ்தூரி ராமராஜ், கோயம்புத்தூர்.

******
திரு இரா. இரவி அவர்கள் ஹைகூ கவிதைக்காக பிறந்தவர். இரவி அவர்கள், மக்களின் நன்மைக்காகவும், மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தன்னுடைய ஹைகூ கவிதைகள் மூலம் இணையதளத்தில் ஒரு புரட்சியை உருவாக்கி வருபவர்.புதுக்கவிதைகளும் எழுதி உள்ளார் .

“வெளிச்ச விதைகள் என்ற நூலில், மிக அருமையாக, புதுக்கவிதைகள் மூலம் நல்ல கருத்துக்களை கூறி உள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், அவசர உலகில் உறவுகளுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை.  மக்களுக்கு உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் விதமாய் அழகாக கூறி உள்ளார்.

மனிதனுக்கு முதல் உறவு அம்மா, அம்மாவை பற்றி அழகாக கூறிய வரிகள்.

“உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்த
                
உயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா!”
“கெட்டவன் ஆனாலும் விட்டுத்தர மாட்டாள்
                
நல்லவன் என்றே மற்றவரிடம் வாதிடுவாள்”  

     அழகு.

                அம்மாவுக்கு அடுத்து மனிதனுக்கு இரண்டாவது உறவு அப்பா, ஒரு பெண்ணுக்கு அப்பா தான் முதல் தோழன், பெண்களுக்கு தைரியம் ஊட்டுவது அப்பா.  அப்பாவை பற்றி அருமையாக கூறிய கவிதை வரிகள்.

                நெறிபடுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை!
                
நன்மை தீமை எடுத்து இயம்புபவர் தந்தை!

மிகவும் அருமையான வரிகள். உறவுகளின் முக்கியத்துவத்தை எளிதாக சொல்லியுள்ளார்.

                குடும்பம் என்ற மரத்தின் ஆணிவேர் பெண்கள்!
                
குடும்பத்தை பேணிக்காப்பது பெண்கள்!

தாய்மொழி பற்று; மக்களுக்கு நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்து கூறியுள்ளார் இரா. இரவி அவர்கள்.

“தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்து!
                
தமிழர்களிடம் தமிழில் பேச என்ன தயக்கம்!

உழைப்பே ஊதியம் என்று உழைப்பின் பெருமையை தன்னுடைய கவிதைகள் மூலம் சொல்லி உள்ளார்.

“சும்மா இருந்தால் இரும்பு கூட துருபிடிக்கும்
                
சும்மா இருந்தால் மனிதன் சிருதுரும்புதான்”

அணையட்டும் சாதீ !

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியும், இன்றும் சாதிகள் ஒழிந்தபாடில்லை.

“சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும்
                
சாதிமத வெறி உடன் மாண்டால் போதும்!”

சாதி மதவெறி மாண்டு விட்டால் பூமியே சொர்க்கம் தான்.
எதிர்கால கனவு;

“நாடு முன்னேற வேண்டும் என்று, எதிர்கால கனவாய் எல்லோரும் காண வேண்டும்.

“இமயம் முதல் குமரி வரை ஆறுகளால்
                
இந்தியா ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்!”

என்ற வரிகளால் புரிந்து கொள்ளலாம்.

திருமண நாள்;

வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மறக்கமுடியாத நாள் அவர்களின் மணநாள். கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்க கூறிய வரிகள் நன்று.

“ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
                
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல்!”

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் திரு. இரா. இரவி அவர்களின் ஹைகூ கவிதைகளை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னுடைய எளிமையான கவிதை நடையினை அர்ப்பணித்துள்ளார்.  தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள்புரிவராக.  மேலும் மேலும் தாங்கள் கவிதைகள் எழுதி பேரும் புகழும் பெறவேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.

கருத்துகள்