நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது !
தகவல் தொடர்பு இல்லாத காலத்தில்
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று !
அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் !
நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் !
நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான்
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள் !
நிலவை சாட்சியாக வைத்து காதலித்த
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு !
நிலவு பார்த்ததே என்றே பயத்தால்
நின் கரம் பிடித்தேன் என்றவர்கள் உண்டு !
நிலவுக்கும் காதலுக்கும் அன்றும் என்றும்
நெருங்கிய தொடர்பு உண்டு !
நிலவு பேசாது தன்னோடு பேசியதாக
நாளும் கற்பனை செய்பவர்கள் உண்டு !
நிலா விடு தூது இன்று காதலர்களிடையே
நின்று விட்டப் போதிலும் இன்றும் !
நிலாவின் மீதான காதல் காதலர்களுக்கு
நாளும் இருந்துக் கொண்டே இருக்கின்றது !
புதுமண இணைகள் செல்லும் சுற்றுலாவை
புதுமையாக தேன்நிலவு என்று பெயர் வைத்தனர் !
இனி வருங்காலத்தில் புதுமண இணைகள்
இனிய நிலாவிற்கே சென்று வரும் காலம் வரும் !
கருத்துகள்
கருத்துரையிடுக