கவிஓவியா மாத இதழ் ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு !

கவிஓவியா மாத இதழ் ஆசிரியர் 
மயிலாடுதுறை இளைய பாரதி தந்த தலைப்பு !

மெரினா புரட்சி !  கவிஞர் இரா இரவி ! 

கொட்டக் கொட்டக் குனிந்த தமிழினம் 
கொட்டும் கரம் முறிக்கக்  கூடியது !

ஏறுதழுவுதல் பண்பாட்டிற்குத் தடை இட்டது 
இளைஞர்கள் மாணவர்கள் திரண்டனர் மெரினாவில் !

இப்படி ஒரு பிரமாண்டக் கூட்டம்   மெரினாவில் 
எப்படிக் கூடியது என்று மிரண்டது நாடு !

வரலாற்றில் பொன் எழுத்துக்களால் 
வடிக்க வேண்டிய உன்னதப் போராட்டம் !

அமைதியாக நடந்தது அறவழிப் போராட்டம் 
அனைவரும் திரண்டனர் மெரினாவை நோக்கி !

மிரண்டது டெல்லி பிறந்தது சட்ட வழி
மன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினர் !

குடியரசுத் தலைவரும் ஒப்பமிட்டு அனுமதி 
குடி கெடுத்த பீட்டா  எடுத்து ஓட்டம் !

உலகத் தமிழர்கள் ஒன்றாவதுக் கண்டு 
உலகத் தமிழினப் பகைவர்கள் அஞ்சி நடுங்கினர் !

வெண்ணை திரண்டு வருகையில் சட்டி  உடைந்த  கதையாக 
வேண்டாத வேலை செய்து காவல்துறை களங்கப்பட்டது !

தலைவன் இல்லாத போராட்டம் வென்றது 
தரணிக்கு ஒற்றுமையின் நன்மையை உணர்த்தியது !

மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் உண்மை 
மண்ணில் வெற்றியை நிலையாக  நிலை நாட்டினான்   !

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை மெரினா 
உலகத்தின் கவனம் ஈர்த்து வென்றது மெரினா புரட்சி !

கருத்துகள்