மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி . வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழராய்ப் பார்த்து திருந்தா விட்டால் தமிழை வளர்க்க முடியாது !கவிஞர் இரா .இரவி !

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
சி . வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

தமிழராய்ப் பார்த்து திருந்தா விட்டால் 
தமிழை வளர்க்க  முடியாது !கவிஞர் இரா .இரவி !

இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் 
இனிய தமிழில் பேசிக் கொள்ளுங்கள் !

தமிங்கிலம் கலக்காமல் நல்ல தமிழில் 
தமிழரோடு உரையாடி மகிழுங்கள் !

உலகின் முதல் மொழிக்காரன் தமிழன் 
உணரவில்லை  தாய்மொழியின் சிறப்பை !

மதம் பரப்ப வந்த சி .யு .போப்  கூட 
மனம் மாறி தமிழ்ப் பரப்பி வாழ்ந்தார் !

அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் 
அனைவரும் சொல்கின்றனர் தமிழே முதல் !

மற்றவர்கள் அறிந்திட்ட தமிழின் அருமை 
மறத்தமிழன் இன்னும் அறியாதது வேதனை !

கடவுளின் கருவைறையில் தமிழ் ஒலிக்க வேண்டும் 
கற்கண்டுத் தமிழ் கடவுளுக்குப் புரியாதா கேட்க வேண்டும் !

உயர்நீதி  மன்றங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் 
உன்னத மொழிக்கு உரிய இடம் தந்திட வேண்டும்  !

ஆரம்பக்கல்வி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் 
அவசியம் இது சட்டத்தால் கட்டாயமாக்கப்பட வேண்டும் !

அங்காடிகளில் பலகைகளில் தமிழ் இருக்க வேண்டும்
அன்னைத் தமிழை அரியணை ஏற்றிட வேண்டும் !

நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த மொழிகள் 
நாடறிய கூத்தாட்டம் போட்டு மகிழ்கின்றன !

தமிழா நீ தூங்கியது போதும் இனியாவது விழி 
தமிழ் மொழி காக்க அணி வகுப்போம் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்