படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி நன்றி .திரு தமிழ் அரசு

இனிய காலை வணக்கம்....
.......................................................
இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

இன்றைய சிந்தனை...
...........................................
உயிர் நண்பன்..
...............................
*ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது.
* அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான்.
*உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.
* அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.
* நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான்.
*அந்த மனித குரங்கு, கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன்.
*என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன் என்றது.
இரவு பொழுதும் வந்தது....
*புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.
* மனிதனும் மனிதகுரங்கும் மாறி மாறி உறங்க முடிவு செய்தனர்.
* மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.
* புலி இவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என எண்ணி மனிதனிடம்.... வஞ்சகமாக ....
“இப்போது மனிதகுரங்கு தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு.....எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.
*மனித மனம் குரங்கை விட மோசமானது.
*நாம் தப்பிக்கலாம் என்று தன்னலம் கருதி மனிதன் குரங்கை கீழே தள்ளிவிட்டான்.
*கீழே விழும்போது நடந்ததை புரிந்த கொண்டது குரங்கு. ஆனால்.. புலியோ “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும்....உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இவ்வாறு கூறினேன்.
*இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன்....நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது.
* அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது.
* மனிதனோ பயத்தால் நடுங்கினான்.
*மனித குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.
* புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டேன்.
* நீ கவலை இல்லாமல் இருக்கலாம்....” என்றது. 
ஆம்..நண்பர்களே...
*நண்பன் என்று வந்தவனிடம்
 நட்பு பாராட்ட வேண்டும்.
*ஒருமுறை நட்பின் புனிதத்தில் 
குறை கண்டோமேயாயின் அந்த நட்பு 
அதன் மதிப்பை இழந்தே போகும்..
ஆம்., நட்பு உயிரை விட மேலானது*

கருத்துகள்