.நன்றி ! தினமணி கவிதைமணி இணையம் வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !




http://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2648811.html

.நன்றி !  தினமணி கவிதைமணி இணையம்



வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !
By கவிதைமணி  |   Published on : 13th February 2017 04:47 PM  |   அ+அ அ-   |
சல்லிகட்டுக் காளைகள் துள்ளிப் பாய்ந்தன
சந்தோசத்தில் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்தனர் !

அமைதி வழியில் போராட்டிப் பெற்ற வெற்றி  
அயல்நாட்டுக் குளிர்பானம் ஒழித்திட வழிவகுத்த வெற்றி !

அயல்நாட்டு நிறுவனங்ககளை எச்சரிக்கக் கிடைத்த வெற்றி
அனைவரும் ஓரணியில் திரண்டதால் கிடைத்த வெற்றி !

.அங்கு இங்கு என்று எங்கும் தொடர்ந்த போராட்டம்
அப்படியே தமிழகத்தை ஒருங்கிணைத்தப் போராட்டம் !

மாணவர்கள் தொடங்கி வைத்த அறப்போராட்டம்
மாண்புகளோடு கண்ணியமாக நடந்தப் போராட்டம் !

ஆண் பெண் இருபாலரும் கூடியபோதும்
அனைவரும் பண்பு காத்திட்டப் போராட்டம் !

போராளிகளின் பசிப்  போக்கியது ஒரு கூட்டம்  
பாதுகாப்புக்கு நின்றவர்களின்  பசியும் போக்கியது !

அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பித்தப் போராட்டம்
அரசியல் இன்றி அழகாய் நடந்தப் போராட்டம் !

உலகமே உற்று நோக்கிய உன்னதப் போராட்டம்
உலகம் முழுவதும் ஆதரவு தந்திட்டப் போராட்டம் !

அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் சல்லிக்கட்டு
அழகாய் நடக்கின்றது அகிலம் கண்டு ரசிக்கிறது !

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை மட்டுமல்ல
கூடிப்போராடினால் கிட்டும் வெற்றி என்பது உண்மை !

உலகமய ஏமாற்று அரசியலுக்கு வைத்தது வேட்டு
உலகிற்கே உணர்த்தியது பன்னாட்டுத் திருட்டு !

காளைகள் இனத்தை அழிக்கும் பன்னாட்டுத் சதியை
காளைகள் கூடி முறியடித்தனர் கொட்டுக வெற்றிமுரசு 

கருத்துகள்