தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
வாக்களித்த மக்களே வெறுக்கும்படி
அரியாசனம் ! கவிஞர் இரா .இரவி !
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு
உருக்குலைந்து வருவது வேதனை !
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
அறம் மறந்து அறிவிலி ஆகின்றான்
ஆசைப் பிடித்து நாளும் அலைகிறான்!
மனிதன் என்பதை மறந்து துளியும்
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
எப்படியும் அரியாசனம் அமர்வதே
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான்
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான்
வாக்களித்த மக்களே வெறுக்கும்படி
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார்
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !
கருத்துகள்
கருத்துரையிடுக