குஞ்சுகளுக்கு
ஊட்டி மகிழும்
தூக்கணாங்குருவி !
மிக உயர்வானது
உலகில்
தாய்மை !
மனித இனத்தில் மட்டுமல்ல
பறவை இனத்திலும்
தாயே சிறப்பு !
தன் பசி பொருட்படுத்தாது
சேய்கள் பசிப்போக்கும்
தாய்ப்பறவை !
உயிரினங்கள் அனைத்திலும்
உன்னத உறவு
தாய் !

கருத்துகள்
கருத்துரையிடுக