படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஹைக்கூ ! மு. கெளந்தி சென்னை.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  மு. கெளந்தி
சென்னை.

ஆடிபட்டம்
அதிகமாக விதைக்கபடுகிறது
விவசாயி உடல்கள் !

கண் திறந்த சிலையை
தடவி தடவி பார்க்கிறான்
சிற்பியின் குருட்டுமகன் !

குங்குமபொட்டை
படுநேர்த்தியாக வைக்கிறாள் விதவை
சாமிபடத்தில் !

ஊரிலிருந்து தள்ளி வைத்தும்
ஒய்யாரமாக நிற்கிறார்
காவல் தெய்வம் !

கடைசிவரை
கருவறைக்குள் செல்லவே இல்லை
காலுடைந்த சிலை !

வெட்டியான் இட்ட தீயில்
வேகமாய் பொசுங்குகின்றது
சாதி !


கருத்துகள்