குறிப்பு !இது உண்மையான படம் இல்லை என்றபோதும் படத்திற்கு வரைந்தது . .படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குறிப்பு !இது உண்மையான படம் இல்லை என்றபோதும் படத்திற்கு வரைந்தது .
.படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
இரண்டு புலிகளுக்கு இரையானாலும்
குட்டிகளைக் காத்த மகிழ்வில்
தாய்மான் !
தன்னுயிர் தந்து
குட்டிகள் உயிர் காத்த
தாய்மையின் இமயம் !
தன்னலமில்லாத
ஊரே உறவு
தாய் !
ஈடு இணையற்ற
மேன்மை
தாய்மை !
தன்னுயிர் பற்றி
துளியும் கவலையில்லை
சேய்களைக் காத்திட்ட மகிழ்வு !
கருத்துகள்
கருத்துரையிடுக