படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 



தன் பசி மறந்து 
ஆட்டுக்குட்டியின் பசியாறல்
ரசிக்கும் குழந்தை  !

ஆட்டுக்கு கூட 
பாலூட்ட அம்மா உள்ளது 
குழந்தைக்கு ?

ஆடு குட்டி 
பாசம் ரசிக்கும் 
குட்டிக் குழந்தை !

சோகம் மறந்து 
ரசித்து மகிழும் 
குழந்தை !

கள்ளமில்லாக் குழந்தையின் 
கண் சிமிட்டாத
ரசிப்பு ! 

கருத்துகள்