நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !

நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !


http://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2644779.html

--
எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
By கவிதைமணி  |   Published on : 06th February 2017 02:38 PM  |   அ+அ அ-   |
வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை !
வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை !

துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை !
துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை !

கடலிலிருந்துப் பயணித்து மேகமாகும்  மழை!
கனிந்து மண்ணிற்கு வந்து விழும் மழை !

வருடம்   தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை !
வளங்கள் பெரும் வளர்ச்சிப் பெருக்கும்  மழை !

மயில்கள் தொகை விரித்து ஆடினால் மழை !
மண் செழிக்கும் மகசூல் பெருக்கும் மழை !

வருமுன்னே ஆராய்ந்து சொல்கின்றனர் மழை !
வஞ்சியர்கள் விரும்பி மகிழ்ந்திடும் மழை !

அளவோடு  பெய்தால் நலமாக  வாழவைக்கும் மழை !
அளவின்றிப் பெய்தால் இன்னல் தரும் மழை !

புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் மழை !
புவியின் விளைச்சலை வளர்த்திடும் மழை !

காதலர்களின்  ஊடல் தீர்த்து வைக்கும் மழை !
காதலர்களின் கூடல் இணைத்து வைக்கும் மழை !

ஓரமாக ஒதுங்கி நின்ற எனை நனைத்தது மழை !
உடன் இறங்கி மழையில் நனைந்து மகிழ்ந்தேன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கருத்துகள்

கருத்துரையிடுக