வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன்

வெளிச்ச விதைகள் !



நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை; கவிமாமணி 
சி . வீரபாண்டியத் தென்னவன் !
தலைவர்   மாமதுரைக் கவிஞர் பேரவை !

வெளியீடு ; வானதி பதிப்பகம்.
 பக்கம் .190  விலை ரூபாய்   120
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com

      மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் வெளிச்ச விதைகள், எடுப்போடும், துடிப்போடும், இனியதொரு கணிப்போடும், தமிழேந்தி விளையாடும் தகுதியுடன், சிலம்பாடும் முழக்கத்தின் முகம்காட்டி, முறுக்கேற்றும் அகம்காட்டி, ஒன்பது தலைப்புகளில் உயர்தர வைரங்களாக ஒளி வீசுகிறது.

உயிரும் உடலும் தந்த வள்ளல்
உயிர் வளர்த்த உன்னதச் செம்மல் !

      தன்மானத் தமிழ்ப்பாலைத் தாயிடத்தில் பெற்ற மகனாய், உன்னத உறவுத் தலைப்பில், பாலோடு பாசமும் தந்திட்ட பாரியைத், தன்தூக்கம் தொலைத்து சேயினை இமை போல் காத்த எதிர்பார்ப்பில்லா அன்பு நிலையை கண்ணுங்கருத்துமாய் கவனித்து படைத்த இடம் முத்துமணிச் சித்திரமாய் முல்லைமலர் இரத்தினமாய்த் தூயதமிழ் வாயமுதம் தோயவரும் கவியமுதாய்க் காட்சி தருகிறது.

தமிழா தமிழா தூங்கி வழிந்தது போதும்
எழுந்து நில் எழுச்சி கொள் தமிழ் காத்திடுவோம் !

எனத் தமிழ், தமிழன், தமிழ்நாடு எனும் தலைப்பினில் பாடுகின்ற போழ்து சாட்டையடி பூட்டிவரும் செந்தமிழைக் காட்டுகின்றார்.  சூட்டுக்கோல் வார்த்தைகளைச் சூரியக்கதிர் ஆக்குகிறார். சுரவெடியின் சீற்றத்தைச் சங்கநாத வேகத்தை பிரம்பெடுக்கும் பாய்ச்சலினை எழுத்துகளில் காட்டுகிறார்.  சுமூகப் பதிவுகளில் கண்சிவந்து காணப்படும் கவிஞர்  இரா. இரவி மண்ணகத்தின் மாசுநிலைத் தூசுகளை மனச்சாட்சி அற்ற செயல்களைப் பாட்டரங்கத்தோட்டாவாய் மாறிநின்று சுடுகின்றார்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வழியில் செல்கின்றவராய்.

கருப்பு ஆடுகளை உடன் களையெடுப்போம்
கண்ணியமானவர்களுக்கு 
கரம் கொடுப்போம் !

என ஆழிப்பேரலையாய் ஆரவாரம் செய்கின்றார். இயற்கையின் சித்தரிப்பு தன்னம்பிக்கை முனை காதல் உலகு நாட்டு நடப்பு சான்றோர் அலைவரிசை உதிரிப்பூக்கள் யாவிலும் மதிப்புறு முனைவர் ஐக்கூத்திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவிதை கேட்பவரை வியக்க வைக்கும் கேள்விக்கு விடைவழங்கும் பாட்டாக இருக்கிறது .



படியேறி நடக்கிறது.  பூட்டுகளை உடைத்திங்கே போலிகள் முகமூடியை கிழித்தெறிகிற விதம் அருமை! நல்லபடி நடந்தபடி நறுந்தமிழாய் இருந்தபடி வெல்லுகிற கொடியேந்தி வெடித்துவரும் சுடரேந்திச் செல்லுகிற விதம் அருமை சிந்தனையைத் தூண்டுவதே அதன் பெருமை மாமதுரைக் கவிஞர் பேரவையின் மாணிக்கமே வீரபாண்டியத் தென்னவன் என் வாழ்த்துகள்.

கருத்துகள்