படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


தேசத்திற்கு சோறுபோட்ட 
உழவனை 
கண்டுகொள்ளவில்லை  தேசம் !

தனியாய் அமர்ந்து 
தற்கொலைக்குச் சிந்திக்கும் 
உழவன் !

உழவன் வாழ்வில் 
ஏற்றம் வந்தாலே 
உண்மையான வளர்ச்சி !

சோகத்தில் உழவன் 
உதவவில்லை 
சொந்தங்களும் !


வெள்ளையன் ஆண்டபோது கூட
இல்லை இவ்வளவு வறுமை
உழவனுக்கு !

கருத்துகள்