வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

வெளிச்ச விதைகள் !


நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் மதிப்புரை கவிபாரதி மு .வாசுகி மேலூர் !

வெளியீடு ; வானதி பதிப்பகம்.
 பக்கம் .190  விலை ரூபாய்   120
23. தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை 600 017.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com



     உலகறிந்த கவிஞர் இரா. இரவி அவர்கள் பதினாறாவது நூலான ‘வெளிச்ச விதைகள்’ என்ற நூலினை விரித்தவுடன் ‘ஹைக்கூ’ மட்டுமே எழுதுபவர் என நினைத்து முடிவு செய்திருந்த எனக்கு ‘முழு நீளக் கவிதைகளே முழுவதுமாக இருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

முன்பக்க அட்டையில் அடுக்கிய புத்தகங்களின் நடுவே ஓர் அறிவு விருட்சம் கிளம்பியிருப்பதைப் போலவும், அதில் ஒருபாதி பசுமையும் மறுபாதி வறட்சியையும் உணர்த்துவது போன்றும், அந்த இரண்டு பாதிக்குள்ளும் இரண்டு முகம் தெரிவதும் என மிக அழகாக, நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு. 

நூலின் தலைப்பு மிக மிக அருமை! உள்ளிருக்கும் கவிதைகளுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான தலைப்பு! தலைப்பிலேயே ஒரு தன்னம்பிக்கை விதை முளைத்து வெளிச்சத்தை உண்டாக்குவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

      பின்பக்க அட்டையில் இனிமையான தோற்றத்துடன் இந்தியாவே அறிந்திட்ட இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் புகைப்படமும் வார்த்தை-களும் அருமை! கூடவே, மதுரை புகழ் இரா. மோகன் ஐயாவின் சிரிப்பை உதிர்க்கும் புகைப்படம், வார்த்தைகள் இந்நூலுக்கு தாய், தந்தை, மனைவி, மகள் என அத்துனை பேருக்கும் கவிதை இந்நூலில் உண்டு. 


சான்றோர்கள், சாதனை மங்கையர்கள் எனவும், தன் சுற்றுலாத் துறை பற்றிய கவிதையும் இருப்பது இரா. இரவி அவர்களுக்கு நாட்டைப் பற்றியும், வீட்டைப் பற்றியும் இருக்கின்ற அக்கறை பற்றி சொல்லி விடுகிறது நமக்கு!. கவிதைகளில் எளிய சொற்களை பயன்படுத்தியிருப்பதால் சிறு குழந்தைகளுக்கும் நன்றாகவே புரியும்.

‘சிந்து பற்றிய தலைப்பில்:
      உந்தன் பெற்றோர்கள் மட்டுமல்ல
      உலகில் பெண் பெற்ற பெற்றோர்கள், அனைவரும் மகிழ்ந்தனர்.
 என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.

‘தங்கவேலு மாரியப்பன் கவிதையில்

      ஓடி வந்து நீ உயரம் சென்ற போது
      உயரம் சென்றது நீ மட்டுமல்ல இந்தியாவும் தான்!

ஒரு தனி மனிதனின் சாதனையால் இந்தியாவின் நிலையை உயர்ந்ததை அனுபவித்து எழுதியிருக்கிறார். இரா.இரவி!

உழைப்பே உன்னதம் :
  ‘உழைப்பே உன்னதம் என்ற தலைப்பில்
 அடுத்தவன் உழைப்பில் பிரியாணி உண்பதை விட
 அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல்! 

என்ற வரிகள் தன்னிடம் இருப்பதையே தான் பயன்படுத்த வேண்டும். பிறரின் மனத்தில் பகட்டு வாழ்வு வாழக் கூடாது என சாடியிருக்கிறார்.

‘‘பட்டதாரிப் பெருகிப் பயனில்லை என்ற தலைப்புக் கவிதையில்,
கல்வி பெருகியது முற்றிலும் உண்மை!  
      
பண்பு பெருகவில்லை என்பது கசப்பான உண்மை!

என்ற வரிகள் நாட்டின் உண்மை நிலவரமே என்பதை அனுபவித்-தவர்கள் மறுக்க முடியாத உண்மை!

புறக்கணிப்பு, குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி போன்ற கவிதைகள் மிகவும் அருமை!

      இரா. இரவி அவர்களின் எழுத்து, பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், இன்று தான் எழுதும் காலம் வரை உள்ள நிலையை அழகாக ‘என் ஓட்டம் என் இலக்கு’ கவிதைகள் வழியாக கூறியிருக்கிறார்,  இரா.இரவி அவர்கள்.

      ஒவ்வொருவருக்கும் முதல் முயற்சி, முதல் பயணம், முதல் வெற்றி வாழ்வில் மறக்கவே முடியாதது.

அப்பா முயற்சித்து முன்னுக்கு வருபவர்களுக்கு ஒன்றை நான் கூற விரும்புகிறேன்.

முதலில்,
      நமது கால்களால் நாம் நிற்கப் பழகிக் கொண்டால்...
      நம்மைச் சுற்றி ஏணிகளாய் எவருமே வருவார்கள்.

இதுவே உலகம் நமக்கு உணர்த்தும் பாடம்.
நீங்கள் உங்கள் கால்களை நம்பியவர்
இன்று உங்களுக்கு உதவ எத்தனையோ ஏணிகள்!

ஏறுங்கள்! ஏறுங்கள்! புகழின் உச்சம்! – அது
எப்பவுமே ஒட்டியிருக்கும் உங்களின் மச்சம்!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்