சல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி !
சல்லிக்கட்டு தடை நீக்கிட மாணவர்கள் நடத்திய போராட்டம் மகத்தானது .பாராட்டுக் கூறியது .இந்தியாவில் என் உலகில் மாணவர் தொடக்கி போராட்டத்திற்கு இதனை லட்சம் பேர் கூடியதாக வரலாறு இல்லை .புதிய வரலாறு படித்தீர்கள் .உலகமே வியந்தது உங்கள் ஒற்றுமை .துளி கூட வன்முறை இன்றி காந்திய வழியில் நடந்தது .சல்லிக்கட்டு தடையில் உள்ள உலகமயத்தின் சுரண்டலை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்டினார்கள் முகநூல் ,கட்செவி மூலம் ஒரு புரட்சி ஏற்படுத்தினார்கள் .அரசியல்வாதிகளே அசந்து போனார்கள் .
உலகத்தமிழர்கள் யாவரும் அவரவர் வசித்த நாடுகளில் இருந்து ஆதரவு தந்து அவர்களும் போராடினார்கள் .பெங்களூர் ,மும்பை, டெல்லி என இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உங்கள் போராட்டத்தைதமிழர்களின் ஒற்றுமை கண்டு
உலகத்தமிழர்கள்யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர் .தமிழ்ப் பகைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .ஆனால் அந்த ஒற்றுமை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை என்பது வேதனை .
பரவாயில்லை .ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு . "SOMTHING IS BETTER THAN NOTHING "அதன்படி 26.1.2017 அன்று வாடிவாசல் திறக்கட்டும் .அன்று அரசு விடுமுறை என்பதால் மாடி பிடிக்கும் வீரர்களும் ,பார்வையாளர்களும் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும் .வாடிவாசல் திருந்து காளைகள் வந்தாலே வெற்றிதான் .இனி பீட்டாவின் வேலை பலிக்காது .ஓடி விடுவார்கள் .இனி வருடா வருடம் சல்லிக்கட்டு நடத்தியாக வேண்டும்என்ற நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வந்து விட்டது .மைய அரசு உச்ச நீதி மன்றத்தில் ஒரு வாரத்திற்கு யாரும் தடை கேட்டாலும் தடை தரக்கூடாது என்று ஆணை பெற்றுள்ளது .எனவே உடனடியாக வாடிவாசல் திறப்பதே நல்லது .
தமிழகஅரசு உச்ச நீதி மன்றத்தில் தனியாக தடை ஆணை பெற வேண்டியதில்லை சட்டசபையிலும் சல்லிக்கட்டு வருடா வருடம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு சட்டமாக்கி அனுப்பி விடலாம் .
கருத்துகள்
கருத்துரையிடுக