ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !      கவிஞர்  இரா  .இரவி ! 

பொங்கலுக்குள் அனுமதித்து  இருந்தால்  
பொங்கி  இருக்க  மாட்டார்கள் 
மாணவர்கள் ! 

உச்ச நீதிமன்றம் 
உச்சம் இழந்தது 
அவமானமே மிச்சம் !

மக்கள் எழுச்சியால் 
மண்டியிட்டது 
பீட்டா !

அயல்நாட்டுக் குளிர்பானம் 
விரட்ட உதவிய 
பீட்டாவிற்கு நன்றி !

இப்படை  போதுமா 
இன்னும் கொஞ்சம் வேணுமா 
மிரட்சியில் அரசியல்வாதிகள் !

ஏறு தழுவுதல் என்பதை 
மிருகவதை என்போர் 
மூடர் கூட்டம்  !

ஆட்டம் கண்டது 
ஓட்டம் எடுத்து 
பீட்டா !

கருத்துகள்