அன்புகூர்ந்து இச்செய்தியை வெளியிடவும் க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம்,புதுச்சேரி

தனித்தமிழ்இயக்கம் காந்திநகர் அரசு தொடக்கப்பள்ளியில் திருக்குறள் போட்டி ஒன்றை நடத்தியது. பள்ளித் தலைமைஆசிரியர் இராசகோபால் தலைமைதாங்கினார். 2ஆம் வட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணாக்கர் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திருக்குறளை ஒவ்வொருவரும் மனத்தில் வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் எடுத்துரைத்தார். வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி வாழ்த்துரை வழங்கினார்.
அழகாகவும் பிழையில்லாமலும் திருக்குறள் பார்த்து எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பணப்பரிசு அளிக்கப்பட்டது. இரண்டாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் திருவாட்டி மல்லிகாகோபால் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் புரவலர் கி.கலியபெருமாள் ஆறுதல் பரிசுகளை வழங்கிப்பேசினார். நிகழ்ச்சியில் தலைமைஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்புகூர்ந்து இச்செய்தியை வெளியிடவும்
க.தமிழமல்லன் தலைவர் தனித்தமிழ் இயக்கம்,புதுச்சேரி

கருத்துகள்