உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

இனிக்கவில்லை 
பொங்கல் 
உழவர்கள் தற்கொலை !

மகிழ்வோடு வாழ வேண்டியவன் 
மனம் உடைந்து தற்கொலை 
தலைகுனிவு !

முற்றிலும் உண்மை 
உழுதவன் கணக்குப் பார்த்தால்
ஒன்றும் மிஞ்சவில்லை !

உழவனைத் தொழ வேண்டும் 
என்றார் வள்ளுவர் 
வாழ விடவில்லை !

உலை வைத்தது 
உழவனின் வாழ்விற்கு 
உலகமயம் !

கருத்துகள்