படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிறகுகள் இருந்தும்
பறக்க பயமேன்
துணிவுடன் பற !
குருவி இனம் மட்டுமல்ல
காளை இனமும் அழித்தது
உலகமயம் !
தஞ்சம்
கையில்
அழகிய குருவி !
தாயைப் பிரிந்த
கவலையில் தவிக்கும்
குருவி !
கூட்டை அழித்து
குடும்பத்தைச் சிதைத்தனர்
மரத்தை வெட்டி !
கருத்துகள்
கருத்துரையிடுக