ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !

ஹைக்கூ முதற்றே உலகு !


நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !

ஹைகூ கவிஞர் இரா.இரவி சார்  உங்கள் கவிதைகள் அனைத்தும் நவரத்தினங்கள்.
ஓவொன்றும்  ஒரு விதம் . தன்னம்பிக்கைக்கு ஒரு வழிகாட்டி ."தயங்குவதில்லை
தடைகள் கண்டு எறும்புகள்"

“பொன்னை விட மேலானது

போனால் வராது

நேரம் “

இவைகள் தன்னம்பிக்கைக்கு எடுத்துகாட்டு.

ஹைகூ  கவிதைகள் மூலம்  நல்ல கருத்துக்களை எளிதாக மக்களிடம் பதிய வைக்க முடியும் .

“உடல் பலத்திலும்

உயர்ந்தது

உள்ளத்தின் பலம் .”

அறிவை வளர்க்க நூலகம் .

அறிவு வளர்க்கும்

அற்புத இடம்

நூலகம்..!”  அருமை .

தங்கள் கற்பனைக்கு எடுத்துகாட்டு

“ரசித்து பார்த்தால்

அழகுதான்

எருக்கம் பூவும் .” அழகு .

“அருகே  முட்கள்

ஆனாலும் மகிழ்வாக

ரோசா “!  மகிழ்ச்சி.

ஒரு கருத்தை கவிதையில் சொன்னால் எளிதாக போய் சேரும் , அதுவும் ஹைகூ
கவிதைகள் மூலம் சொல்லும் போது மிக எளிதாய் பதிந்து விடும் மனதில் .

தண்ணீர் இல்லை என்றால் கண்ணீர் என்பதற்கு எடுத்துகாட்டாய் மழை பற்றி
சொல்லிய கவிதைகள்  முத்துக்கள்.

“உணர்த்தியது

உண்ணமுடியாது  பணத்தை

மழை”.

நட்புக்கு என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி .

“ஏணியாகவும் இருப்பான்

தோனியாகவும் இருப்பான்

நண்பன் “! நல்ல நட்புக்கு எடுத்து காட்டு.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தங்கள் ஹைகூ கவிதைகளை . அத்தனையும்
அழகு.....அருமை .  வாழ்த்துக்கள் . நன்றி .

கருத்துகள்