நன்றி .தினமணி கவிதைமணி இணையம்

நன்றி .தினமணி கவிதைமணி இணையம் 
-- 

.http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jan/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2640933.html


சட்டம் : கவிஞர் இரா .இரவி 

By கவிதைமணி  |   Published on : 30th January 2017 04:02 PM  |   அ+அ அ-   |  
மக்களுக்காக இயற்றப்படுவதே சட்டம்   
மனதில் கொள்ள வேண்டும் எல்லோரும் !
சட்டம் என்று சொல்லி பயமுறுத்தாதீர் 
சட்டம் மக்கள் நலன் காக்க வேண்டும் !
வெள்ளையனிடம் இருந்து விடுதலை எதற்கு ?
விரும்பியபடி ஏழைகள் மகிழ்வாக வாழ்வதற்கு !   
திடீரென சில சட்டங்கள் வருகின்றன 
தினமும் மக்களை வேதனையில் வீழ்த்துகின்றன !
அடக்குமுறைக்குப் பெயர்தான் சட்டமோ ?
அன்பாக உரைப்பதே உன்னதச் சட்டம் !
மக்களுக்கு நன்மை செய்வதே சட்டம்
மக்களை வதைப்பது சட்டம்அன்று !
பட்டுக்கோட்டையில் பாடல் வரிகள் 
பாவலன் என் நினைவிற்கு வந்தன !
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்  தடுக்குது 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடுது !
திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டுமென்றார் 
திருடன்கள் திருந்துவதாகத் தெரியவில்லை !
சட்டம் என்பது நல்லாருக்கு ஆதரவாகவும் 
தீயோருக்கு எதிராகவும் இருக்க வேண்டும் !
நாட்டு நடப்போ எதிர்மாறாக உள்ளன 
நடக்கும் இக்கொடுமைகளை மாறிட வேண்டும் !
சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருகின்றனர் 
சட்டத்தை மீறுகிறான் தண்டிக்க முடியவில்லை !
அப்பாவி மக்களிடம் மட்டும்  நம்நாட்டு சட்டம் 
அவரமாகப் பாய்ந்து தண்டனை கொடுத்து மகிழும் !
இந்நிலை மாற வேண்டும் சட்டம் என்பது 
ஏழை மக்களை காக்க வேண்டும் அதுவே சிறப்பு !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்