உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் தேர்வான கவிதை !

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் தேர்வான கவிதை !

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி டிசம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -85 வது
தலைப்பு--- உன்னுள் நீ 08.
உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்
உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ !
எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்
எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் !
ஆனால் அதற்கு முன்பாக என்னை
அளவின்றி எனக்குப் பிடிக்கும் !
நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்
நீ முதலில் உன்னைக் காதலி !
உன் இதயத்தில் காதலி இருக்கட்டும்
உன்னை உன் இதயத்தில் முதலில் வை !
உன்னை நீ முதலில் நேசிக்க வேண்டும்
உனக்குப்பின் மற்றவரை நீ நேசிக்கலாம் !
உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை !
சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை !
உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை !
சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை !
உன்னை நீ மிக மிக உயர்வாக எண்ணு
உனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது !
ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே
இனிதே பிறந்தோம் என்று எண்ணு !
என்னடா வாழ்க்கை இது வெறுக்காதே
என்னுடைய வாழ்க்கை என்று வாழ் !
இன்பம் வந்தால் ஆனந்தக் கூத்தாடாதே
துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே !
கவிஞர் இரா .இரவி
86.வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதி,
வடக்கு மாசி வீதி மதுரை . 625001.
தமிழ்நாடு .இந்தியா
.
மின் அஞ்சல் eraeravik@gmail.com

கருத்துகள்