இரண்டு மனம் ! கவிஞர் இரா .இரவி !

இரண்டு மனம் ! கவிஞர் இரா .இரவி !

எல்லோருக்கும் உண்டு இரண்டு மனம்
ஒன்று தேவதை மற்றொன்று சாத்தான் !

தேவதை சொல்வதைக் கேட்டு நடந்தால்
தேவைப்படாது என்றும் அச்சம் பயம் !

சாத்தான் சொல்வதைக் கேட்டு நடந்தால்
சாத்தியப்படாது என்றும் நிம்மதி மகிழ்ச்சி !

நல்லது நினைக்க நல்லதே நடக்கும்
கெட்டது நினைக்க கெட்டதே நடக்கும் !

செய்யாதே என்று தேவதை சொன்னால்
செய்யாமல் இருந்தால் நன்மை கிட்டும் !

செய்திடு என்று சாத்தான் சொன்னால்
செய்யாமல் இருந்தால் நிம்மதி கிட்டும் !

மனம் ஒரு குரங்கு என்றார்கள் அன்று
மனக்குரங்கை அடக்குவது கடமை !

மனம் போன போக்கில் எல்லாம்
மனிதன் போக நினைப்பது மடமை !

மனசாட்சி என்று ஒரு சாட்சி உண்டு
மனதை அதன் வழி செலுத்தல் நன்று !

அறமனம் சொல்வதைக் கேட்டு நடங்கள்
மடமனம் சொல்வதை என்றும் கேட்காதீர்கள் !

கருத்துகள்