ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அன்று தொண்டு
இன்று துட்டு
அரசியல் !

மாறின கால்கள்
மாறவில்லை விழுபவர்கள்
அரசியல் !

காற்றில் பறந்தன
சுயமரியாதைக் கொள்கை
அரசியல் !

கொள்கையானது
குறுக்குவழி கொள்ளையடிப்பு
அரசியல் !

அழிந்து நாளானது
நம்பிக்கை நாணயம்
அரசியல் !

அன்று மக்களுக்காக
இன்று தன் மக்களுக்காக
அரசியல் !

வழக்கொழிந்து விட்டன
நீதி நேர்மை
அரசியல் !

நம்பிக்கைத் துரோகம்
நாளும் அரங்கேற்றம்
அரசியல் !

நாற்றம்
தோற்றது  கூவம்
அரசியல் !

முழுவதும் களையானால்
களையெடுப்பது எங்ஙனம்
அரசியல் !

ஏணியில் உயர்ந்து
பாம்பு கடித்து கீழே
பரமபத அரசியல் !
.

கருத்துகள்