அன்புடையீர் வணக்கம்
தமிழ் கற்பிக்கும் 32 அட்டைகளைப் புத்தக வடிவில் ஆக்க வேண்டும்
என்ற பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் விருப்பத்தின்படி 32 அட்டைகளை
இணையத்தில் படிக்கக்கூடிய புத்தக வடிவில் உருவாக்கி உள்ளேன்.
மேலுள்ள இணைய இணைப்பின் வழியாக இதனை இறக்கலாம். இறக்கினால்
32B.exe கோப்பாக இருப்பதால் வைரஸ் உள்ளது என்று சொல்லும். இருந்தாலும்
அது பற்றிக் கவலைப்படாமல் இறக்கவும். இறக்கிச் சொடுக்கினால் முதன்மை
பக்கம் தோன்றும். அதிலுள்ள Book mark என்ற பகுதியைச் சொடுக்கினால்
புத்தகம் தோன்றும் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் படிக்கலாம்.
அல்லது மேலுள்ள 32B.rar கோப்பினை இறக்கி Unzip செய்தால் F 32 B என்ற
exe கோப்பு தோன்றும் அதைச் சொடுக்கி முன்பு சொன்னது போல் அதிலுள்ள
Book mark என்ற பகுதியைச் சொடுக்கினால் புத்தகம் தோன்றும் ஒவ்வொரு
பக்கமாகத் திருப்பிப் படிக்கலாம். பிரச்சனை இருந்தால் அழைக்கவும்
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - 9788552061
கருத்துகள்
கருத்துரையிடுக