கொடிது வறுமை ! கவிஞர் இரா .இரவி !
மேலாடை இன்றி ஏழை வீட்டுக் குழந்தை
மேலாடை போக மற்றுமொரு துண்டு !
சமதரும சமத்துவ சமுதாயம் வேண்டும்
சமுதாயத்தில் ஏற்றது தாழ்வு வேண்டாம் !
ஏழை பணக்காரன் வேண்டவே வேண்டாம்
எல்லோரும் சமம் என்றாக வேண்டும் !
மாட மாளிகை யாருக்கும் வேண்டாம்
மழைக்கு ஒழுகும் குடிசை யாருக்கும் வேண்டாம் !
அனைவருக்கும் பொதுவாக ஒரே அளவில்
அளவான இல்லம் இருந்தால் போதும் !
கொடிது வறுமை இல்லாது ஒழிப்போம் !
கருத்துகள்
கருத்துரையிடுக