படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


உண்பதற்கு அல்ல 
விற்பதற்கு கண்ணு 
பலா !
------------------------------
நீயே ஒரு பலா 
உனக்கு எதற்கு குழந்தை 
பலா !
-----------------------------
பலா விற்றுப் பெறும்
பணத்தில்தான் 
வாங்கவேண்டும் அரிசி !
----------------------------
ஏழைகளுக்கு 
எட்டாக்கனியா 
பலா ! 
--------------------------
கொஞ்சம் பொறு தங்கமே 
விற்றவுடன் போகலாம் 
வீட்டுக்கு ! 

கருத்துகள்