படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வளம் கொழிக்கும் கருப்பு ஆடுகள்
திண்டாட்டத்தில் ஏழை மக்கள்
சர்வாதிகாரத்தின் உச்சம் !

கேள்விப்பட்டு இருக்கிறோம்
துக்ளக் தர்பார்
பார்க்கிறோம் நேரில் !

விடுகின்றனர் கதை
கேப்பையில் நெய் வடியும்
ஒத்து ஊதும் சிலர் !

ஒரே ஒரு தாள் இரண்டாயிரம்
வரிசையில் நின்றவர்களுக்கு
பன்னாடைகளுக்கு பல கோடிகள் !

அம்பானிகளுக்குக் கவலை இல்லை
அடிமட்ட மக்களுக்குக் கவலை
முட்டாள்தனமான முடிவால் !

கருத்துகள்