புதிய தலைமைச் செயலர் சரியான தேர்வு ! கவிஞர் இரா .இரவி !

புதிய தலைமைச் செயலர் சரியான தேர்வு !
கவிஞர் இரா .இரவி !

புதிய தலைமைச் செயலர் சரியான தேர்வு .நேர்மையான அலுவலர் ,முதுநிலையில் உள்ளவர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் இ .ஆ .ப .அவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
மதுரையில் 1992 ஆம் ஆண்டு ஆட்சித்தலைவராக இருந்தபோது ,அவர்களுக்கு அம்மை போட்டு உள்ளது . 26.1.1992 இன்று வருவது சந்தேகம் என்றனர் .ஆனால் குடியரசு தினம் என்பதால் கொடியேற்ற வேண்டும் என்று, அவர்கள் அதோடு வந்து கொடியேற்றி .எனக்கும் மற்ற சிலருக்கும் விருது வழங்கினார்கள் .கடமை மீது பற்று உள்ளவர் என்பதற்கு இந்து நிகழ்வு சான்றாகும் .
அவர்களின் கரங்களால் 26.1.1992 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப்பணியாளர் விருது பெற்றேன் . உடன் மதுரை சுற்றுலா அலுவலராக இருந்து, விருதுக்கு பரிந்துரை செய்த சா .சுப்பிரமணியன் அவர்கள் துணை இயக்குனாராகி பணி நிறைவு பெற்றார்

கருத்துகள்