படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

மறக்கவில்லை அடைகாத்ததோடு 
வளரும்வரை காக்கும் 
தாய்க்கோழி !

கோழியின்   நிழலில் 
வளரும்வரை     
பயமில்லை !

குஞ்சுகள் பசியாறுவதைப்
பார்த்துப் 
பசியாறுகின்றது !

பறவைக்கு இனத்திலும் 
உயர்ந்த உறவு 
தாயே ! 

தன்னலமற்ற 
தன்னிகரில்லா உறவு 
தரணியில் தாய் !

கருத்துகள்