இலக்கியத்தில் எல்லாம் உண்டு அதுபோல
அவளிடமும் எல்லாம் உண்டு !
இன்பம் நல்கிடுவாள் சில நேரம்
துன்பமும் நல்கிடுவாள் !
இலக்கியம் படித்தால் இன்பம்
என்னவளைப் பார்த்தாலே இன்பம் !
இலக்கியம் பெயர் பெற்றுத் தரும்
என்னவள் பெயரே இலக்கியம் !
காலத்தால் அழியாது இலக்கியம்
கன்னியின் நினைவும் அழியாது !
எல்லோரும் படிக்கலாம் இலக்கியம்
என்னவள் நான் மட்டும் படிக்கும் இலக்கியம் !
பல திருப்பங்கள் உண்டு இலக்கியத்தில்
பாவையிடமும் பல திருப்பங்கள் உண்டு !
நல்ல இலக்கை இயம்புவது இலக்கியம்
நங்கை என்னை இலக்கை இயம்பிடுவாள் !
இலக்கியத்தில் சில இலக்கணங்கள் உண்டு
என்னவளுக்கும் சில இலக்கணங்கள் உண்டு
இலக்கியத்திற்கு வாங்கும் விலை உண்டு
என்னவளுக்கு வாங்கிட விலை இல்லை !
இலக்கியம் படித்தால் நேரம் போவது தெரியாது
என்னவளை படித்தாலும் நேரம் போவது தெரியாது !
.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக