தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
புதிய டைரி  ! கவிஞர் இரா .இரவி ! 

எழுதப் பழகுவோம் நாட்குறிப்பு 
எழுதினால் மறக்காது நினைவுகள் !

நல்லது கெட்டது இரண்டும் எழுதுங்கள் 
நாள் தோறும் மறக்காமல்  எழுதுங்கள் !

கடந்து வந்த பாதையை அசைபோடலாம் 
கடந்த காலத்தையும் காட்சிப்படுத்தும் !

மலரும் நினைவுகளை எந்நாளும் 
மலர்விக்கும் ஆற்றல் உண்டு அதற்கு !

எந்த நாளில் என்ன நடந்தது என்று 
எழுதிவந்தால் வருங்காலத்திற்கு உதவும் !

நடந்தவைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் 
நடக்கவேண்டியதையும் பதிவு செய்யலாம் !

இலக்குகளையும் திட்டங்களையும் பதியலாம் 
இனிதே அடைந்தோமா சரிப் பார்க்கலாம் !

நாட்குறிப்பில் குறித்து வைத்ததைப்   படித்து 
நடந்தவைகளை தெளிவாக இயம்பலாம் !

எதுவுமே எழுதாமல் வைத்து இருந்துவிட்டு 
இல்லத்தரிசிக்கு கோலம்  போடத் தருபவர் உண்டு !

ஒரு வருடம் தவறாமல் எழுதி வந்தால் 
ஒவ்வொரு வருடமும் எழுதி வருவீர்கள் !

நல்லவர்கள் பயமின்றி எழுதலாம்  
கெட்டவர்கள் எழுதாமல் இருப்பது நன்று !

கையூட்டை எழுதி வைத்து பின் 
கையும் களவுமாக மாட்டிய வரலாறு உண்டு !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்